Home தாயகச் செய்திகள் 15 நாள்களுக்கான அறிக்கையை 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குக! – பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு யாழ். நீதிவான் உத்தரவு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

15 நாள்களுக்கான அறிக்கையை 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குக! – பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு யாழ். நீதிவான் உத்தரவு!

Share
Share

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதல் 15 நாள்களுக்கான செயற்பாட்டு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் நெரூர் கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஐ் சோமதேவாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தன.

சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின்போது முன்னிலையாகியிருந்தனர்.

செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்திருத்தன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன. இந்த அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நேற்றுடன் இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி மீள அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளின் முதல் 15 நாட்களுக்கான செயற்பாட்டு அறிக்கையை இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று நேற்று வழங்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...