மூன்று கைத்துப்பாக்கிகளுடன் ஆண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹராமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்படி நபர் கைது செய்யயப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
திஸ்ஸமஹராமை பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் திஸ்ஸமஹராமை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திஸ்ஸமஹராமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment