வவுனியாவில் ஹயஸ் ரக வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வவுனியா – யாழ். வீதியில் புதிய பஸ் நிலையத்துக்கு அண்மையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் வவுனியா – யாழ். வீதியில் புதிய பஸ் நிலையம் முன்பாக சென்று கொண்டிருந்த போது வீதியில் சைக்கிளில் பயணித்த வயோதிபருடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment