Home தாயகச் செய்திகள் வட்டுவாகல் பாலத்தினை இருவழிப் பாதையுடன் புதிய பாலமாக நிர்மாணிக்க அனுமதி!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வட்டுவாகல் பாலத்தினை இருவழிப் பாதையுடன் புதிய பாலமாக நிர்மாணிக்க அனுமதி!

Share
Share

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் – கரைச்சி, முல்லைத்தீவு வீதியின் பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டில் இறுதியாகத் திருத்தப்பட்டுள்ள குறித்த பாலம் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் இருவழிப் பாதையுடன் கூடிய புதிய பாலமாக அதனை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, தேசிய விலைமனு கோரல் முறைமையின் அடிப்படையில் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...