Home தாயகச் செய்திகள் வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)

Share
Share

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்துப் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வன்முறையைக்  கட்டுப்படுத்தினர். அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மூளாய் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டது.மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஏற்பட்ட தர்க்கம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு நபர்களின் பிரச்சினை மீண்டும் தலைதூக்கிய நிலையில், அது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் பிரச்சினையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.

அதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்த வேளை பொலிஸார் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதையடுத்துப் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அந்தப் பகுதியில் குழுமியிருந்தவர்களைத் துரத்தினர்.

அத்துடன் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர். பலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மூளாய் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...