Home தென்னிலங்கைச் செய்திகள் ‘லங்காதீப’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

‘லங்காதீப’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

Share
Share

‘லங்காதீப’ ஊடகத்தின் மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்குச் சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம, அநுராதபுரம் – பொல்பிதிகம பிரதேசத்தில் குழந்தை ஒன்று பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரித்து ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம உடல்நலக் குறைவு காரணமாக ஏற்கனவே சத்திர சிகிச்சை பெற்றவர் எனவும், ஆனாலும் தொடர்ந்து ஊடகக்  கடமைகளில் ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் காரணமாக மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகமவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இந்தத் தாக்குதலின்போது ஊடகவியலாளரைக் காப்பற்றச் சென்ற அவரது மனைவியும் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம தொடர்பில் கண்காணித்து சந்தேகநபருக்குத் தகவல் வழங்கி குற்றத்துக்கு  உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...