Home தாயகச் செய்திகள் யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

Share
Share

யாழ்ப்பாணம் நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினம் இடம்பெறவுள்ளது. 

இதனையொட்டி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர். 

இதன்பிரகாரம், நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர், உடனடியாக பணிப்புரை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...