Home தாயகச் செய்திகள் யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றி – தமிழரசுக் கட்சி தெரிவிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றி – தமிழரசுக் கட்சி தெரிவிப்பு!

Share
Share

யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

இந்த ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கை முன்வைத்து ஹர்த்தாலுக்குத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று வடக்கு, கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ். நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. அவர்கள் ஆதரவு வழங்காதமை எமக்கு மன வருத்தம்.

எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனேயே ஜனாதிபதி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் எம்மைத் தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர்கள் கூறினார்கள். இதுவே எமது வெற்றி.

இந்தக் ஹர்த்தால் ஓர் அடையாளப் போராட்டமே. இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றக் கோரிப் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...