யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளை சனிக்கிழமை மாபெரும் தொழில் வாய்ப்பு முகாம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறும் குறித்த தொழில் முகாமில் 30 நிறுவனங்கள் தமது நிறுவனங்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான எதிர்பார்ப்புடன் பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்
விக்னேஸ்வரன் ஐங்கரன் யாழ். ஊடக அமையத்தில் இன்று தெரிவித்தார்.
ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய அவர் மேலும் கூறுகையில்,
“பல தொழில் சந்தைகள் நடைபெற்றாலும் இம்முறை நடைபெறும் தொழில் வாய்ப்பு முகாம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றோம்.
இந்த முகாம் ஊடாக முதற்கட்டமாக 150 இளைஞர், யுவதிகளுக்கு உடனடி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலை எதிர்பார்போர் வருகை தரவுள்ளனர்.” – என்றார்.
Leave a comment