மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை ஓட்டோவில் வந்த மூவர் குழு வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
மானிப்பாய் – கட்டுடை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஊரெழுவை சேர்ந்த நபர் ஒருவரே இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment