கண்டி மாவட்டம், யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (ஐக்கிய மக்கள் சக்தி) சம்பிக விஜேரத்ன (வயது – 53), அவரது மனைவி (வயது – 44) மற்றும் மூத்த மகள் (வயது – 16) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
பேராதனைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வீட்டுக்குள் வெவ்வேறான இடங்களிலேயே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இளைய மகள் உயிர் தப்பியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இது கொலைச் சம்பவமா என்ற கோணத்தில் பேராதனைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment