Home தாயகச் செய்திகள் மூளாய் வன்முறை; மேலும் மூவர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மூளாய் வன்முறை; மேலும் மூவர் கைது!

Share
Share

மூளாய் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் மேலும் மூவர் புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டனர்.

புதன்கிழமை (23) மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து விரைந்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவர், நேற்றிரவு தொடக்கம் புதன்கிழமை (23) அதிகாலை வரையிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். மேலும், மூளாய் பகுதியில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...