முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் நால்வருக்கும் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதியன்று முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால், இராணுவத்தினர் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றபோது, இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் பிணைக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எனினும் மனுதாரர் தரப்பு இதனைக் கடுமையாக ஆட்சேபித்தது.
எனினும், கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த இராணுவத்தினர் நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
Leave a comment