Home தாயகச் செய்திகள் மன்னாரில் தந்தை செல்வாவின் உடைக்கப்பட்ட சிலை புனர் நிர்மாணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னாரில் தந்தை செல்வாவின் உடைக்கப்பட்ட சிலை புனர் நிர்மாணம்!

Share
Share

மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் அந்த உருவச்சிலை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (01) காலை திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு நிகழ்வில் மதத் தலைவர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன், கட்சியின் உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மத தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்துக்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை கடந்த புதன்கிழமை (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அவரது சிலைக்கு அருகில் இருந்து தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது.

சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து மன்னார் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைவாக இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். யாழ்....

வவுனியாவில் வீதியோர வியாபார நிலையங்கள்மாநகர சபையால் அதிரடியாக அகற்றல்!

வவுனியா மாநகர சபையால் இலுப்பையடி வீதியோர வியாபார நிலையங்கள் அகற்றப்பட்ட போது அந்தப் பகுதியில் வீதியோர...

தங்க முலாம் பூசிய துப்பாக்கி விவகாரம்; துமிந்த திஸாநாயக்கவுக்கு பிணை!

கொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி...

கொக்குத்தொடுவாய் புதைகுழி; பகுப்பாய்வு விபரங்கள் வெளியாகின!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர்...