அரியாலை மனிதப் புதைகுழிகளிலிருந்து நேற்றைய தினமும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.
மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்ட அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று செவ்வாய்க் கிழமையும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 01, தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 02 என்று அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிகளில் தொடர்ந்த ஆய்விலேயே நேற்றைய தினம் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இவற்றுடன், இந்த மனிதப் புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின்
எண்ணிக்கை 111ஆக அதிகரித்தது.
இதேநேரம், நேற்றைய தினம் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன. இவற்றுடன், இதுவரை 99 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மனிதப் புதைகுழியில் நேற்றுடன் 33ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment