மன்னார், முருங்கன் – இசமலாதவுல் பகுதியில் மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர்
உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மன்னார் – மடு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மல்வத்து ஓயா அருகே, நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மணல் தோண்டிக் கொண்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment