Home தாயகச் செய்திகள் மட்டு. மாவட்ட முன்னாள் எம்.பி. கனகசபை காலமானார்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டு. மாவட்ட முன்னாள் எம்.பி. கனகசபை காலமானார்!

Share
Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை தனது 86 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

மட்டக்களப்பு, களுதாவளையைச் சேர்ந்த இவர், வயது மூப்பு காரணமாகக் காலமானார்.

1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான கனகசபை, 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...