Home பிரதான செய்திகள் மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கை!
பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கை!

Share
Share

மட்டக்களப்பு நகரில் விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த வீதிகளில் பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடவடிக்கை ஒன்றை சனிக்கிழமை (12) இரவு மேற்கொண்டதையடுத்து மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டனர்.

மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான 6 மாதத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்களை தடுப்பதற்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் வழிகாட்டலில் முக்கிய சந்திகளில் வீதியால் பயணிக்கும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

வெளிநாட்டில் வாழ்வோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டது!

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி...