Home தென்னிலங்கைச் செய்திகள் மகிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கவேண்டும் – பொன்சேகா கருத்து!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மகிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கவேண்டும் – பொன்சேகா கருத்து!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

2010இல் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான ஊழல் மற்றும் அரசியல் முறைகேடுகளையும் வன்மையாக கண்டித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்-

மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய இலங்கைத தலைவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு பார்வை இல்லை.

சர்வதேச தலைவர்களை ஒப்பிடுகையில், அவர்கள் ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.

2010 ஆம் ஆண்டு ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு அரசு மேற்கொண்ட பயணத்தின்போது, 65 பேர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் அதிகாரபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை நாம் மன்னிக்கவில்லை. அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய அரசின் செயல்பாட்டை
ஆதரிக்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என்று நான் கூறவில்லை. அவரது தலைவிதியைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார்.

ஆனால் இந்த விஷயத்தில், இந்த அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்-என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பணம், குரும்சிட்டி – தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

தங்காலையைச் சென்றடைந்த மஹிந்த – ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி வரவேற்பு!

அம்பாந்தோட்டை, தங்காலை – பெலியத்தவிலுள்ள தனது இல்லத்துக்கு இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ...

பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிக்கும் மேலும் 15 பேர் வெளிநாடுகளில் சிக்கினர்!

இலங்கையின் பாதாள உலகக் குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு...

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு திறமையில்லையேல் நாடே அழியும்! – நேபாளத்தின் நிலையை சுட்டிக்காட்டி ரணில் விசேட அறிக்கை!

“நேபாளத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான...