Home தாயகச் செய்திகள் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் நால்வர் தென்னிலங்கையில் விபத்தில் சிக்கி மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் நால்வர் தென்னிலங்கையில் விபத்தில் சிக்கி மரணம்!

Share
Share

அனுராதபுரம் – குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் இருந்து பயணித்த வான் ஒன்றே இந்த விபத்தில் சிக்கி இருந்தது.

விபத்தில் காயமடைந்த வானின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர் சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வானில் பயணித்த, முல்லைத்தீவு,செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (வயது -38) மற்றும் புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-29) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-29) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேனுயன் என்ற இளைஞர்கள் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த பயணித்தவர்களில் ஏனைய இருவரின் நிலை ஆபத்தாக இருப்பதாக கூறப்படுகின்றது.

வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...