யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நேற்று (18) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த இளைஞர் மது அருந்திவிட்டு கடலில் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடலில் மூழ்கிய இளைஞன் மாவட்ட n உதவியுடன் மீட்கப்பட்டு உழவு இயந்திரத்தில், மருதங்கேணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment