ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்ததாகவும் விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வழக்கொன்றுக்காக, நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் நேற்று அவரை கைதுசெய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
அதன்போது, நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மாலைத்தீவு சென்றுள்ளமையினால் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஒரே விமானத்திலேயே நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment