Home தென்னிலங்கைச் செய்திகள் பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிக்கும் மேலும் 15 பேர் வெளிநாடுகளில் சிக்கினர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிக்கும் மேலும் 15 பேர் வெளிநாடுகளில் சிக்கினர்!

Share
Share

இலங்கையின் பாதாள உலகக் குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைகள் ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இந்தக் குற்றவாளிகள் தற்போது அந்தந்த நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை நிறைவடைந்தவுடன், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” – என்றார்.

இதேவேளை, ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதாள உலகக் குற்றங்களை ஒழிக்கப் பெரும் பங்களிப்பு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை தொடர்பில் நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...