பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்ட அறிக்கையில் திருத்தம் செய்யப்படாமையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.
சபையின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் தவிசாளர் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்ட நிலையில் அதனைத் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியில் ஒன்றான ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவிர்ந்த ஏனைய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு), தேசிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்த போதிலும் ஆட்சியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 9 பேரும் ஈ.பி.டி.பி. ஒருவருமாக பத்து உறுப்பினர்கள் சகிதம் மாதாந்தக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Leave a comment