சிலாபம் – புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பஸ் விபத்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 21 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காகச் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment