Home தாயகச் செய்திகள் பகிடிவதைக் குற்றச்சாட்டில் கைதான யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு பிணை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

பகிடிவதைக் குற்றச்சாட்டில் கைதான யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு பிணை!

Share
Share

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ
கற்கைகள் மற்றும் வணிக பீடமாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் யாழ்ப்பாணம்
மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத் தப்பட்டனர்.

விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேகநபர்கள் 19 பேரையும்
தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கை தவணையிட்டு
நீதிவான் உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...