Home தாயகச் செய்திகள் நெடுந்தீவுக் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் ஓகஸ்ட் 06 வரை மறியல் நீடிப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

நெடுந்தீவுக் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் ஓகஸ்ட் 06 வரை மறியல் நீடிப்பு!

Share
Share

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊர்காவற்றுறை நீதிவான் நளினி சுபாஸ்கரன் இந்த உத்தரவைப்  பிறப்பித்துள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் இந்திய இழுவைப் படகையும், அதில் இருந்த 7 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர்.

பின்னர் மேற்படி மீனவர்களை இழுவைப் படகுடன் கடற்படையினர் காங்கேசன்துறைக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைத்தனர்.

7 இந்திய மீனவர்களையும் கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை ஜூலை 25ஆம் திகதி (நேற்று) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், மேற்படி மீனவர்களின் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...