தமிழர்களின் பாரம்பரிய சொத்தான யாழ். நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனையைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க விரும்புகின்ற நலன் விரும்பிகள் இணைந்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை மந்திரிமனைக்கு முன்னால் நடத்தினார்கள்.
இதில் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும், தமிழர்களின் சின்னங்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அத்துடன் மந்திரிமனை அமைந்துள்ள அந்த நிலத்தைக் காணி உரிமையாளர் நல்ல நோக்கம் கருதிக் கையளிக்க வேண்டும் என்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
தொடர்ந்தும் அசமந்தப்போக்குகள் தொடருமானால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தாங்கள் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

Leave a comment