Home தாயகச் செய்திகள் தமிழின அழிப்புக்குச் சர்வதேச நீதி வேண்டி வடக்கு, கிழக்கில் நாளை பெரும் போராட்டம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழின அழிப்புக்குச் சர்வதேச நீதி வேண்டி வடக்கு, கிழக்கில் நாளை பெரும் போராட்டம்!

Share
Share

தமிழின அழிப்புக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை மாபெரும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

வடக்கு – கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் சமநேரத்தில் (காலை 10 மணிக்கு) இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழிப் பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பஸ் நிலையத்துக்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப் பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும், திருகோணமலையில் சிவன் கோயில் முன்பாகவும் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம் என்று வடக்கு – கிழக்குச் சமூக இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக “மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு” அமைப்பினர் கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாக நாளை காலை 10 மணியளவில் கவனவீர்ப்புப் போராடடத்தில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...