கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் இன்று வியாழக்கிழமை (31) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்துள்ளார்.
பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற டிப்பர் வாகனம், கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் வங்கியில் பணிபுரியும் பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment