ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு இணங்க கோ பே என்ற அரசின் டிஜிற்றல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வு துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலும், பாராளுமன்ற உறுப்பினரான மருத்துவர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது.
நாட்டை டிஜிற்றல் தொழில்நுட்பத்தின் வழியாக சாதாரண மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வெளிப்படையானதும் சிக்கன மானதுமான மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் அரச திட்டங்களுக்கு வழிகாட்டும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
மேலும் கோ பே செயலியின் மூலம், மக்கள் அரசு சேவைகளை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் நம்பகத்தன்மையாகவும் பயன்படுத்த முடியும்.
இந்நிகழ்வில் லங்கா பே துணை தலைமை அதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
Leave a comment