இலங்கைத் தமிழரசுகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் விபத்தில் காயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மையாக அவரின் வாகனமும் கார் ஒன்றும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை – ஆலையடிவேம்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்குச் சிறீநேசன் எம்.பி. சென்றுவிட்டுத் திரும்பியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், காயமடைந்த அவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment