Home தாயகச் செய்திகள் ஜேர்மனில் இருந்து விடுமுறைக்கு யாழ். வந்தவர்இளைஞர் ஒருவர் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல்
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜேர்மனில் இருந்து விடுமுறைக்கு யாழ். வந்தவர்இளைஞர் ஒருவர் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல்

Share
Share

ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாகத் தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். மேற்படி நபர் சகோதரி குடும்பத்தினருடன் முரண்பட்டு, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை அவர், தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் மது அருந்தியுள்ளார்.

அவ்வேளை, ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவரின் நண்பர் அவ்வழியே சென்ற வேளை நிறை போதையில் இருந்த கும்பல் அந்த இளைஞரை வம்புக்கு இழுத்துத் தர்க்கம் புரிந்து, மண்வெட்டிப் பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரை அயலவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர் எனவும், அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்குச் செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...