ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமாக நடைமுறைக்கு வரும்.
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று 11.30 அளவில் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு விவாதம் நடைபெற்றதுடன், பி.ப 3.30 அளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின.
இந்தச் சட்டமூலம், 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும்.
Leave a comment