ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது, ஆதரவாக 151 பேர் வாக்களித்ததுடன், எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மாத்திரம் வாக்களித்தார்.
அத்துடன், வாக்கெடுப்பின்போது சபையில் இருந்த எந்தவொரு உறுப்பினரும் வாக்களிப்பை தவிர்க்கவில்லை.
அதேநேரம், மூன்றாம் வாசிப்பு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை 11.30 முதல் இது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டது.
இதனிடையே, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தின் எந்தவொரு விதியும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணானது அல்ல என்றும் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமெனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment