யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென வினவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற்றது. அரச தரப்பில் இருந்து சி.ஐ.டி. மற்றும் நீதி அமைச்சால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். தேவையான சாட்சிகள் முன்வைக்கப்படும். இந்த மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை இடம்பெறுவதால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது.” – என்றார்.
Leave a comment