Home தென்னிலங்கைச் செய்திகள் சுமந்திரன் செய்வது என்கிறார் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சுமந்திரன் செய்வது என்கிறார் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க!

Share
Share

“இனவாத அரசியல் பாதையை சுமந்திரன் மாற்றாவிட்டால் வடக்கு, கிழக்கில் அவரது அரசியல் எதிர்காலம் இல்லாமல்போகக்கூடும்.” – இவ்வாறு பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுமந்திரன் அடிப்படைவாதி அல்லர், அவர் நடுநிலைவாதி என்றே நாம் இதுவரை காலமும் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், நடுநிலை என்ற போர்வையின் பின்னால் மறைந்திருந்த இனவாதம் என்ற மிருகம் தற்போது வெளிக்கிளம்பியுள்ளது.

இனவாதம் இல்லாவிட்டால் அவர்களுக்கு அரசியல் இருப்பு இல்லை. எனினும், இனவாதத்துக்கு ஒருபோதும் இருப்பு இருக்காது என்பதைப்  புரிந்துகொள்ள வேண்டும்.

சுமந்திரன் தெரிவு செய்த பாதை தவறு. எனவே, அவர் தனது பயணத்தை மாற்றிக்கொண்டு இனவாதமற்ற – நாட்டின் சமத்துவத்துக்காக முன்னிலையானால் நல்லது. அவ்வாறு இல்லையேல் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும்.

கடந்த பொதுத்தேர்தலில் அவர் நாடாளுமன்றம்கூட வரவில்லை. அவருக்கு வடக்கு, கிழக்கில் அரசியல் வாய்ப்பு கிட்டாமல் போகும்.” – என்றார்.

இதே போன்ற காட்டமான உரை ஒன்றைச் சுமந்திரனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் – ஆனால் அவரைச் சுட்டும் விதத்தில் – அவரை இனவாதி என மோசமாக விமர்சிக்கும் விதத்தில் – அரசு தரப்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்கா நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...