Home தாயகச் செய்திகள் சுமண தேரரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சுமண தேரரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!

Share
Share

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்க தொலைபேசி சமிஞ்சைகளை அடிப்படையாகக் கொண்டு அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மட்டக்களப்பு நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்துரைத்த மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரர், இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.

வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கருத்துரைத்தமைக்கு எதிராக, சட்டத்தரணி தனுக்க ரனஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாடு தொடர்பிலேயே சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...