Home தாயகச் செய்திகள் சிக்கலாகும் வடக்கு – கிழக்கு நிலவரம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிக்கலாகும் வடக்கு – கிழக்கு நிலவரம்!

Share
Share

இன்று புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரை கிழக்கு, வடக்கு மாகாணங்கள் கனமழை, வேகமான காற்று வீசுகை – புயலால் பாதிக்கப்படும். இரு காற்று சுழற்சிகள் ஒன்றாகி புயலாக மாற்றம் பெற்று நாளை மறுதினம் வடக்கு மாகாணத்தை நோக்கி நகரும். இதனால், முழுநாடும் கனமான மழை கிடைக்கப்
பெறும். இதனால், வரலாறு காணாத நெருக்கடி நிலையை வடக்கு, கிழக்கு மாகாணங்களும் நாடு எதிர்கொள்ளும் ஆபத்து உள்ளது என்று
யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை தலைவரும் வானிலை அவதானிப்பாளருமான நா.
பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அவர் விடுத்த வானிலை அவதானிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

இலங்கையின் காலநிலை வரலாற்றில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றாகி தென் பகுதியூடாக ஊடறுத்து கிழக்கு, வடக்கு மாகாணத்தை நோக்கி வருவது இதுவே
முதன்முறையாகும்.

வங்காள விரிகுடாவின் வரலாற்றிலும் மேற்கு நோக்கி நகர்ந்த காற்றுச்சுழற்சி மீண்டும் கிழக்கு நோக்கி நகர்ந்து இன்னுமொரு காற்றுச்சுழற்சியுடன் இணைந்து பலமடைவதும் இதுவே முதல் முறை.

இதனால் நாடு முழுவதும் மிகக் கனமழையைப் பெறும்வாய்ப்புள்ளது. இந்தக் காற்றுச் சுழற்சியின் செல்வாக்கினுள் இலங்கை முழுவதும் உள்ளடங்கியுள்ளது.ஒரு தாழ்வுநிலை ஃ தாழமுக்கம் ஃகாற்றழுத்த தாழ்வு
நிலை/ தாழ்வு மண்டலம்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்/ புயல்/ சூறாவளி/ சுப்பர் சூறாவளி எந்த திசை நோக்கி நகர்கிறதோ அந்தப் பகுதியே அதன்
காற்றுக் குவிப்பு மையமும் மழை வலயமும் ஆகும்.

அந்த வகையில் இந்த தாழமுக்கம் நகரும் போது இந்த காற்றுக் குவிப்பு மற்றும் மழை வலயத்தினுள் தென்மாகாணம், ஊவா மாகாணம், மிக முக்கியமாக கிழக்கு,
வடக்கு மாகாணங்கள் அடங்குகின்றன.

இன்று புதன்கிழமை முதல் கிழக்கு, வடக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கத் தொடங்கும்.

நாளை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மிகக் கனமழையும், வேகமான காற்றும் வீசும். இந்த நிலைமை எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடரும்.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை, மறுநாள் சனிக்கிழமை திரட்டிய மழைவீழ்ச்சியாக 350 மி.மீற்றருக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, கிழக்கு மாகாணத்தின் கணிசமான பகுதிகள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வரும் நாட்களில் கிடைக்கும் கனமழையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும்.

எதிர்வரும் நாட்கள் வானிலை ரீதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக நெருக்கடியான நாட்களாகும்.

எனவே, பொதுமக்கள் இந்த நாட்களில் கவனமாக செயல்பட வேண்டும். பின்வரும் விடயங்களை கவனத்தில் கொண்டால் பாதிப்புகளை குறைக்க முடியும். அத்துடன், மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகிறது. தீவிர வானிலை
தொடர்பான இந்த முன்னறிவிப்புகளில் சில மாற்றங்கள் நிகழலாம் – என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...