Home தாயகச் செய்திகள் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் கொலை – யாழ்ப்பாணத்தில் பரபரப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் கொலை – யாழ்ப்பாணத்தில் பரபரப்பு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வைரமுத்து சாந்தலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மேற்படி நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில்,

“நான் குறி சொல்லும் வேலை செய்து வருகின்றேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்குத் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற வேளை அவர்கள் உள்ளே வந்து என்னைக் கட்டிப் போட்டு விட்டு நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்த வேளை தம்பி சடலமாகக் காணப்பட்டார்.” – என்று கூறியுள்ளார்.

இருப்பினும் மேற்படி பெண் வழங்கிய வாக்குமூலத்தில் திருப்தியடையாத பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

OTP தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்ட போலி அழைப்புகள் மற்றும் செய்திகள்...

சாதாரண தரப் பெறுபேறு இன்றி உயர்தர தொழிற்கல்வியில் இணைய வாய்ப்பு!

2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. ...

நல்லூர் வளாகத்துக்குள் நுழைந்த இராணுவ வாகனம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்துக்குள் இராணுவ வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், விசனமும் வெளியிட்டுள்ளனர்....

யாழில் வாள்வெட்டுச் சம்பத்தில் ஒருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை ஓட்டோவில் வந்த மூவர் குழு வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது....