Home தாயகச் செய்திகள் கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!

Share
Share

உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது
44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கோண்டாவில் டிப்போவில் பஸ் நடத்துநராக பணிபுரிந்து வருகின்றார்.

நயினாதீவு பகுதியைச் சேர்ந்த இவர் கோண்டாவில் பகுதியில், பணி நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று மதிய உணவுக்காக சைக்கிளில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்டவேளைவீதியால் வந்த வான் அவர் மீது மோதியதில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணை களை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...