Home தென்னிலங்கைச் செய்திகள் குற்றச் செயல்களுக்கு முடிவு கட்ட புதிய சட்டம் கட்டாயம் வேண்டும் – பொலிஸ்மா அதிபர் பிரியந்த வலியுறுத்து!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

குற்றச் செயல்களுக்கு முடிவு கட்ட புதிய சட்டம் கட்டாயம் வேண்டும் – பொலிஸ்மா அதிபர் பிரியந்த வலியுறுத்து!

Share
Share

“குற்றச் செயல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்ட ஏற்பாடுகள் மிகவும் அவசியம்.” – இவ்வாறு புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தலைமறைவாகி இருந்த 11 குற்றவாளிகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல்களைத் தடுக்கும், குற்றக் குழுக்களை ஒடுக்கும் வேலைத்திட்டத்தைத் தற்போதுள்ள சாதாரண சட்டத்தின் பிரகாரம் முழுமையாக முன்னெடுக்க முடியாது. இது பற்றி ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். இதற்கமைய தேவையான புதிய சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்குக்  கிடைக்கப் பெறுகின்றது. சர்வதேசத்தின் நன்மதிப்பை இலங்கை பொலிஸ் பெற்றுள்ளது.

அதேவேளை, நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களைத் தடுப்பதற்குரிய வேலைத்திட்டம் செயற்படுகின்றது. சட்டத்தில் சிற்சில குறைபாடுகள் உள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் நாம் தற்போது கைவைப்பதில்லை.

இவ்வாறு சட்ட ரீதியாக உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். போதைப்பொருள் மாபியாக்களின் பிடிக்குள் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...