Home ஒளிப்படங்கள் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி பகுதியை இன்று நேரில் சென்று பார்வையிட்ட நீதிபதி!
ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி பகுதியை இன்று நேரில் சென்று பார்வையிட்ட நீதிபதி!

Share
Share

மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாகக் கருதப்படும் இடத்தைக் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக்  கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை, இன்று நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் தொல்பொருள் திணக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக  அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உரிய இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.

சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களைத் தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்குப் பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பணம், குரும்சிட்டி – தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்? – சபையில் சிறீதரன் எம்.பி. கேள்வி!

“நாட்டில் போர் முடிவடைந்து  16 ஆண்டுகள் கடந்துள்ள பின்னரும், வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம்...

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை – சபையில் கருணாதிலக!

“பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள்குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது....