கம்பளை, தொலுவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கம்பளை நகரில் இருந்து தொலுவ வழி ஊடாக குருநாகலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, பாதசாரிகள் மீது மோதியுள்ளது.
அதன்பின்னர் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீதும் அந்தக் கார் மோதியுள்ளது.
கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட பெண்கள் இருவர் மீது லொறியின் பின் டயரும் ஏறியுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மற்றொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
காரைச் செலுத்திய பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Leave a comment