Home தாயகச் செய்திகள் கஜேந்திரகுமார் தலைமையிலான குழு தமிழகம் சென்றது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கஜேந்திரகுமார் தலைமையிலான குழு தமிழகம் சென்றது!

Share
Share

தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் குழு நாளை வியாழக்கிழமை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, இந்திய மீனவர் பிரச்னை உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இந்தப் பேச்சு அமையும் என்று தெரியவருகிறது.

இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை தமிழ்நாட்டின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மேற்கொண்டிருந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை சென்னையை சென்றடைந்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் குழுவினர்,

இலங்கையில் சமஷ்டி அரசியல் யாப்பை கொண்டு வருவதற்கான அழுத்தங்களை இந்திய அரசு வழங்கவேண்டும். அதற்காக தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு சென்றடைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னமபலம் எம். பி. தலைமையிலான இந்தக் குழுவில் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஷ் , ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஷ், பிரசார செயலாளர் சட்டத்தரணி ந. காண்டீபன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் அடங்குவர். அங்கு ஒரு வாரம் தங்கியிருக்கும் இவர்கள் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுகளில் ஈடுபடுவர்.

இந்தப் பயணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்-

‘தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசாங்கம் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்கவேண்டும்.

அந்தவகையில் பிராந்திய வல்லரசான இந்திய அரசு இலங்கைமீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது.

இந்தநோக்கத்துக்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இந்த வாரம் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளோம் – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...