Home தாயகச் செய்திகள் ஒரு சைக்கிள், 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி! பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஒரு சைக்கிள், 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி! பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர்!

Share
Share

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப் பகுதியில் இன்று புதன்கிழமை ஒரு சைக்கிளும், 4 மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் பகுதியில் , வீதியின் மறுபக்கத்துக்குச் சைக்கிளைத் திருப்ப முற்பட்டவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி, நிலைதடுமாறி எதிரே வந்த 3  மோட்டார் சைக்கிள்களுடன் மோதியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஒரு சைக்கிளும், 4 மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளன. அவற்றில் பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளைச் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...