Home தாயகச் செய்திகள் உள்நாட்டு போரின்போது மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட மீறல்களுக்கான பொறுப்பை அரசும் படைகளும் ஏற்கவேண்டும் – மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அறிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உள்நாட்டு போரின்போது மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட மீறல்களுக்கான பொறுப்பை அரசும் படைகளும் ஏற்கவேண்டும் – மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அறிக்கை!

Share
Share

நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையே, எதிர்கால குணப்படுத்தல் – நல்லிணக்கம் – நிலையான அமைதியை வளர்ப்பதற்கு அவசியமானவை – என்று தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளது. இதனை தவறவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்
தொடர் ஜெனிவாவில் ஆரம்பமானது.

இதில்,இலங்கை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே
அவர் மேற்படி விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இதனிடையே அண்மையில், தாம், இலங்கைக்கு சென்றபோது, நாட்டின் மிக நீண்டகால
பிரச்னைகளுக்கு, புதிய திசை நோக்கிய பயணத்துக்கு, அந்த நாட்டின் தலைமை
உறுதியளித்தது.

இந்த நிலையில், புதிய அணுகுமுறை, ஒத்திசைவானதும் காலக்கெடுவை வழங்கக்
கூடியதாகவும் அமைய வேண்டும்.

பொறுப்புக் கூறல், நீதியை வழங்குதல், நீண்டகாலமாக இலங்கை மக்கள் அனுபவித்துவரும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் மற்றும் பிரிவினையை நீக்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவையே, எதிர்கால குணப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் நிலை
யான அமைதியை வளர்ப்பதற்கு அவசியமானவை – என்றார்.

மேலும்,

இலங்கை பயணத்தின்போது, மனித உரிமைகள் மீறல், துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான துன்பங்களை தாம் நேரடியாக கண்டேன் என்றும் செம்மணி மனித புதைகுழியில், தனது அன்பானவரின் இழப்பை தாங்கிக்கொள்ளாத துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தை தாம் சந்தித்தார் எனவும் குறிப்பிட்ட டர்க், தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் தனது கணவரைத் தேடி வருகிறார் என்றும் தம்மிடம் கூறினார் என்றும் தெரிவித்தார்.

தண்டனையிலிருந்து விலக்கு என்பது, இரண்டாவது வன்முறை வடிவமாகும். இது தீங்கு சுழற்சிகளை நிலைநிறுத்துகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனிக்கப்பட வேண்டும்.

அவர்களின் குரல்கள் பொறுப்புக்கூறல், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு குறித்த அரசாங்கத்தின் கொள்கைகளை வழிநடத்த வேண்டும்.

அத்துடன், உள்நாட்டு போரின்போது மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை முறையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் அதன் படைகள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்கள் செய்த உரிமைகள் மீறல், குற்றங்களின்
நீடித்த தாக்கத்தை அங்கீகரிக்க வேண்டும்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகளைப் போன்ற அரசு சாராத ஆயுத குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பிலும், உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதுவே, பொதுவான நீதி வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இதனிடையே, இலங்கை அரசாங்கம் விரிவான அரசமைப்பு, சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை உள்ளது.

கடந்த கால துயரங்கள் மீண்டும் ஒரு போதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியமானது.

சுயாதீன அங்கத்தவர்களை கொண்ட, சுயாதீன பொது வழக்கு தொடுநர் பணிமனை ஒன்றை அமைப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சியையும் ஆணையாளர் வரவேற்றுள்ளார்.

இதேபோன்று, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குடியரிமை தொடர்பான பாராளுமன்ற சீர்திருத்தத்தை தாம் தீவிரமாக ஊக்குவிக்கிறார் என்றும் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை...

ஐ.நா. கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றில் விவாதம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட விவாதங்கள்...

சகோதரனின் வீட்டுக் கூரையிலிருந்து வீழ்ந்த நபர் மரணம்!

சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்தவர் கீழே விழுந்து உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – மானிப்பாயைச் சேர்ந்த...

யாழில் டெங்கு கட்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை!

யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய...