உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் முயற்சியாண்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து இன்று சனிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.
இலங்கையின் முயற்சியாளர்களின் பொருளாதார மேம்பாடு இலங்கைக்கு முக்கியமான ஒரு விடயமாகக் கருத்தில் கொண்டு உலக முயற்சியாளர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வவுனியா பல்கலைக்கழகத்தில் புத்தாக்கம் வர்த்தகக் கண்காட்சி மற்றும் வர்த்தகச் செயற்பாடுகள் தொடர்பான கருத்தரங்குகள் இடம்பெறுகின்ற நிலையிலேயே இந்த விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் பூங்கா வீதியில் உள்ள வெளிவாரிகள் கற்கைகள் பிரிவில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் வவுனியா நகர் வழியாகச் சென்று மீண்டும் வெளிவாரி கற்கைககள் பீடத்தை வந்தடைந்ததது.
இதன்போது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அ.அற்புதராஜா, வியாபாரக் கற்கைகள் பீட விரிவுரையாளர்கள் மாணவர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment