அனர்த்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளினால், இலங்கை மின்சார சபைக்கு 20,000 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், வீடுகளை இழந்த பல மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், தடைப்பட்ட அனைத்து மின்மாற்றி அமைப்புகளும் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடைப்பட்ட மின்சார விநியோகத்தில் 99 சதவீதம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேரிடர் காரணமாக நாடு முழுவதும் 4.1 மில்லியன் மின்சாரத்தடைகள் ஏற்பட்டிருந்ததாகவும் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
Leave a comment