Home தாயகச் செய்திகள் இரும்புக் கம்பியால் மகளைத் தாக்கிய தாய்க்கு மட்டு. நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இரும்புக் கம்பியால் மகளைத் தாக்கிய தாய்க்கு மட்டு. நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு!

Share
Share

மட்டக்களப்பில் தனது 16 வயது மகளின் கையினை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயது தாயாருக்கு சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

அதன்படி, குற்றவாளியென நிரூபணமாக்கப்பட்ட அந்தத் தாயின் ஒரு குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் அவ்வாறே 3 குற்றங்களுக்கும் 6 வருட கடூழிய சிறைத்தண்டனை 30 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடாக வழங்குமாறும் நீதவான் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த 2009 நவம்பர் 21ஆம் திகதி 16 வயதுடைய தனது மகளின் கையில் இரும்புக்கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

இவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு 2017 ஜூலை 12ஆம் திகதி வழக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.

தண்டணை சட்டக்கோவை 308 ஆ இரண்டாம் பிரிவின் கீழ் 16 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் தாயார் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இதனை தொடர்ந்து இவ்வழக்கு விசாரணைக்காக கடந்த 25ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வாகன இறக்குமதி வருமானத்தை அடுத்த வருடம் 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!

அரசாங்கம் அடுத்த வருடம் வாகன இறக்குமதி மூலம் தமது வருமானத்தை 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க...

உடைகிறது சங்கு – சைக்கிள் கூட்டணி?

‘ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி (சங்கு சின்ன கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளை பெற்று விட்டு,...

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...

ஒரே நாளில் 5,221 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,221 பேர்...